அதிமுகவில் சேரமாட்டேன். கம்யூனிஸ்ட் தொண்டனாகவே உயிர் துறப்பேன். தா.பாண்டியன்

அதிமுகவில் சேரமாட்டேன். கம்யூனிஸ்ட் தொண்டனாகவே உயிர் துறப்பேன். தா.பாண்டியன்

tha. paandiyanஇந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன் நேற்று திடீரென அதிமுகவில் இணையவிருப்பதாக ஒரு செய்தி டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இணணயதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அக்கட்சியின் வட்டாரங்கள் கூறியபோது இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான தகவல் என்று கூறிய நிலையில் தற்போது தா.பாண்டியன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய, தா.பாண்டியன், ”நான் அதிமுகவில் இணைய இருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது. விஷமத்தனமாக இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளனர். நான் இப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறேன். நாளையும் இருப்பேன். ஒரு பொதுவுடமை இயக்கத் தொண்டனாகவே உயிர் துறப்பேன். எனது மகனுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பெற முயற்சிப்பதாக வெளியான செய்தியும் தவறனாது” என்று கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தா.பாண்டியன் எப்போதுமே ஒரு விசுவாசி என்பது அனைவரும் அறிந்ததே. சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரியில் பணம் இறங்கியதாக வைகோ குற்றஞ்சாட்டியபோது, ஆதாரம் இல்லாமல் எந்த குற்றச்சாட்டையும் கூறக்கூடாது என்று வைகோவுக்கு அவர் அறிவுரை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கம்யூனிஸிய கொள்கையில் தீவிர பற்று இருப்பதால் அதிமுகவின் விசுவாசியாகவே அவர் தொடர்ந்து இருக்க வாய்ப்பு இருந்தாலும் கட்சியில் சேரும் எண்ணம் அவருக்கு சிறிதும் இல்லை என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply