அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு தகுதி உண்டு. தீபா கணவர்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு தகுதி உண்டு. தீபா கணவர்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை கூறி பொதுமக்களையும் தொண்டர்களையும் குழப்பி வரும் நிலையில் இன்று அவர் “அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு கூட நான் போட்டியிட முடியும்” என்று கூறியுள்ளார்.

நான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்பதால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு தகுதி உண்டு என்று அவர் கூறியுள்ளார். தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறிய மாதவன் எதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிட நினைக்கின்றார் என்பது குறித்து குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்கனவே சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியேற்றது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தேர்தல் கமிஷன் இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply