இந்தியா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை. டொனால்ட் டிரம்ப்

இந்தியா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை. டொனால்ட் டிரம்ப்

donaldஅமெரிக்கார்களின் வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பறித்து கொண்டு வருவதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் டெலவேர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றி பேசிய டொனாட்ல் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவின் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் எல்லாம் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.

இந்தியா மிகச்சிறந்த நாடு. மற்ற நாடுகளின் தலைவர்கள் மீது எனக்கு அதிருப்தி கிடையாது. இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களே என்று இங்குள்ள தலைவர்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இதுபோன்ற தந்திரமான வங்கிமுறை நமது நாட்டில் நீடிப்பதற்கு இங்குள்ள தலைவர்கள்தான் காரணம்.

சீனா மீதோ, ஜப்பான் மீதோ, வியட்நாம் மீதோ, இந்தியா மீதோ எனக்கு கோபமில்லை. இவர்கள் நம்நாட்டின் வேலைவாய்ப்பை பறித்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்.

நம்நாட்டு வர்த்தகத்தில் சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளை அனுமதிக்கும் கொள்கைக்கு நாம் இடமளிக்க கூடாது.

நமதுநாட்டின் உற்பத்தி சார்ந்த தொழில்கள் பறிக்கப்படுகின்றன. நமது வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் நாம் இழப்பை சந்தித்து வருகிறோம். வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலையில் நமக்கு சாதகமாக எதுவும் இல்லை. நமது நாடு இனியும் ஜெயிக்க முடியாது. இதற்கு மேலும் இதைப்போன்ற செயல்கள் நடப்பதை நாம் அனுமதிக்க கூடாது. சின்ன குழந்தைகளின் கையில் இருந்து மிட்டாயை பறிப்பதுபோல் நம்நாட்டு வர்த்தகத்தை பிறநாடுகள் பறித்துச் செல்லும் கொள்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது

இவ்வாறு டொனால்ட் டிரம்ப் கூறினார்.

Leave a Reply