கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகரும் இயக்குனருமான சசிகுமார், விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், இருவரும் ஒரு படத்தில் இணையப்போவதாகவும் தகவல் வந்தது. இதுகுறித்து சசிகுமார் கூறும்போது, இப்போதைக்கு இருவருமே தங்கள் பணிகளில் பிசியாக இருப்பதால் இணைந்து படம் செய்யும் வாய்ப்பு இல்லை என்றும் விஜய் படத்தை இயக்கும் அளவுக்கு தனக்கு நேரம் சுத்தமாக இல்லை எண்றும் கூறியுள்ளார்.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு சிம்புதேவன் படத்தில் நடிக்கவுள்ளார். சசிகுமாரும் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இந்நிலையில் இருவருமே இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் தங்கள் பணிகளில் பிசியாக இருப்பதால், விஜய்யுடன் இணைந்து படம் செய்ய தனக்கு சுத்தமாக நேரம் இல்லை என்றும், எதிர்காலத்தில் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்க முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகுமாரும், சமுத்திரக்கனியும் மீண்டும் ஒரு இணைந்து ஒரு படம் தயாரிக்கும் ஐடியாவும் இருக்கின்றது. விஜய்யும், சிம்புதேவன் படத்தை அடுத்து அட்லி படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போதைக்கு விஜய்யும், சசிகுமாரும் இணைவது சந்தேகம்தான் என தெரிகிறது.