சுத்தமான காற்று வேண்டும் என விமான கதவை திறந்த பயணியால் பரபரப்பு

சுத்தமான காற்று வேண்டும் என விமான கதவை திறந்த பயணியால் பரபரப்பு
flight
பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்யும்போது காற்று வரவேண்டும் என்பதற்காக ஜன்னல் அல்லது கதவை திறப்பது பயணிகள் வாடிக்கையாக செய்யும் ஒரு நிகழ்வுதான். ஆனால் விமானத்தில் காற்று வரவேண்டும் என சீனப்பயணி ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு அந்த விமானம் ஒருமணி நேரம் தாமதமாக கிளம்பியது.

சீனாவில் உள்ள சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் பயணம் செய்வதகாக விமானத்தின் உள்பகுதி சென்ற ஒரு பயணி, விமானத்தின் உள்ளே புழுக்கமாக இருந்ததாகவும், அதனால் விமானத்தின் அவசரகால வழியின் கதவை திறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் அந்த பயணியிடம் விமானத்தின் கதவை திறந்தால் ஏற்படும் அபாயங்களை விளக்கி அவரை அமர வைத்தனர். பின்னர் அந்த கதவு மீண்டும் மூடப்பட்டது. இந்த பரபரப்பின் காரணமாக அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Chennai Today News: I just want to get some fresh air! Chinese passenger opens plane door moments before take-off

flight 1  flight2

Leave a Reply