18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. நிர்பயா தாயார் வேதனை

18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. நிர்பயா தாயார் வேதனை
nirbhaya mother
கடந்த 2012ஆம் ஆண்டில் டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளியான சிறுவன், நேற்று விடுதலையாகியுள்ளான். மூன்று ஆண்டு தண்டனை முடிந்தபின்னர் இளம் குற்றவாளியை விடுவிக்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளதால் நேற்று விடுதலை செய்யப்பட்டான். ஆனால் இளம் குற்றவாளியின் விடுதலை பல கேள்விக்கணைகளை எழுப்பியுள்ளது.

தற்போதைய இண்டர்நெட் உலகத்தில் டீன் ஏஜ் பருவத்தில் உள்ளவர்கள் அனைத்து குற்றங்களையும் செய்ய தயார் நிலையில் இருக்கின்றனர். 18 வயதுக்குட்பட்ட ஒருவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தால் அவனுக்கு வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை என்ற நிலை தொடர்ந்தால் இந்த குற்றத்தை செய்ய பலருக்கு தூண்டுதலாக இந்த வழக்கு அமைந்துள்ளதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இளம் குற்றவாளி விடுதலை குறித்து நிர்பயாவின் தாயார் கூறியபோது, “18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட சான்றிதழ் அளிக்கப்பட்டது போல இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ” இது போன்று நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஆச்சரியமும்படவில்லை. எல்லாம் நீதிமன்ற முறைப்படி நடந்திருக்கிறது. இனி எங்கே நம்பிக்கை இருக்கப்போகிறது? எனது மகளின் சம்பவத்துக்கு பிறகும் கூட பாடம் கற்கவில்லை. இனிமேல் எதிர்பார்க்க என்ன இருக்கிறது’ என்று வேதனையோடு கூறியுள்ளார்.

English Summary: I knew nothing is going to happen judging by the attitude of the court: Nirbhaya’s mother

Leave a Reply