இந்திய தொழிலதிபர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக காவல்துறையில் வீடியோ ஆதாரத்துடன் கூடிய புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் இருந்து புவனேஸ்வர் வரை செல்லும் தனியார் விமானம் ஒன்றில் 60 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது முன்னாள் உட்கார்ந்திருந்த 32 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் வீடியோ ஒன்றின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/16cNwvP” standard=”http://www.youtube.com/v/S0YokbnBBlM?fs=1″ vars=”ytid=S0YokbnBBlM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9491″ /]
இதுகுறித்து பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண், புவனேஸ்வர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த 27 ஆம் தேதி தனியார் விமானத்தில் பயணம் செய்த தனது இருக்கைக்கு பின்னால் இருந்த ஒரு தொழிலதிபர் இரண்டு இருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் தன் கையை நுழைத்து தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதுமட்டுமின்றி அந்த தொழிலதிபர் பாலியல் சேட்டையில் ஈடுபடும்போது தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் பதிவு செய்துள்ளார். பாலியல் சேட்டை செய்தவர் பிரபல தொழிலதிபராக இருந்தாலும், அதை தைரியமுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காவல்துறையில் புகார் செய்த அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.