ராஜ்கிரண் மகளை திருமணம் செய்து கொண்டேனா? நடிகர் முனிஷ் ராஜா விளக்கம்
ராஜ்கிரன் மகளைத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என சீரியல் நடிகர் முனிஷ் ராஜா தெரிவித்துள்ளார்.
ராஜ்கிரன் மகள் ஜீனத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டந்த நிலையில் முனிஷ் ராஜா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்
அதில் நானும் ஜீனத்தும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணத்தை இரண்டு குடும்பத்தினரும் ஏற்கவில்லை. ஆனால் வெகு சீக்கிரம் எங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது
மேலும் தங்களது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி என்றும் முனிஷ் ராஜா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.