ஜெயலலிதாவை எளிதில் சந்திக்க முடியாது என்பது உண்மையா? வெங்கையா நாயுடு விளக்கம்

ஜெயலலிதாவை எளிதில் சந்திக்க முடியாது என்பது உண்மையா? வெங்கையா நாயுடு விளக்கம்

vengaiya-naiduதமிழக முதல்வரை எளிதில் சந்திக்க முடியாததால் தமிழகத்தின் பல திட்டங்களுக்கு உதவ முடியாமல் போய்விட்டதாக மத்திய அமைச்சர்கள் சமீபத்தில் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், முதல்வரை இரண்டு முறை எளிதில் சந்தித்துள்ளேன் என மற்றொரு முக்கிய மத்திய அமைச்சரான வெங்கையா நாயுடு கூறியுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக அணியில் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை எந்த கட்சிகளும் கூட்டணி சேரவில்லை. கடைசியில் அதிமுக கட்சியாவது கைகொடுக்கும் என்று இருந்த நிலையில் அதிமுகவும் கைவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக முதல்வர் மீது குற்றம் சுமத்த தொடங்கியது.

தமிழக முதல்வரை எளிதில் சந்திக்க முடியாததால் தமிழக திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றை முடியவில்லை என மத்திய இணை அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட ஒருசில அமைச்சர்கள் கூறிய நிலையில் நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மாநிலப் பிரச்னை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை மிக எளிதில் சந்தித்துள்ளதாகவும், பியூஷ் கோயல் கூறியது அவரது சொந்த கருத்து என்றும் கூறியுள்ளார்.

வெங்கையா நாயுடுவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply