ஐ திரைப்பட விமர்சனம்

i-movie-reviewஐ படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரமின் மிரட்டலான நடிப்பை பார்த்து அசந்து போயுள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள ஐ படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை விக்ரம் தவிர்த்து ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரமின் நடிப்பை புகழ்ந்து தள்ளி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,

படம் மொத்தம் 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடுகிறது. படம் செம நீளம்தான். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. போரடிக்கவில்லை. மாறாக மிரண்டு போய் வெளியே வந்துள்ளோம். ஷங்கர் டெக்னிக்கலாக கொடுத்துள்ள படங்களில் இதுதான் பெஸ்ட். சும்மா மிரட்டி விட்டார் பாஸ். பிரமாதம். விக்ரம் பற்றி சொல்லவே வேண்டாம். மிரள வைத்து விட்டார். என்ன நடிப்பு இது.. அபாரம். இப்படி நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். விக்ரம் வாழ்க்கையில் மிகப் பெரிய படம் இது. படத்தின் லொக்கேஷன் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலும் சீனாவில்தான் எடுத்துள்ளனர். இப்படி ஒரு லொக்கேஷனை தமிழ் சினிமாவில் பார்த்ததே இல்லை. அதிலும் ஷங்கர் தனது முத்திரையைப் பதித்து விட்டார். அசாதாரணமான இடங்கள் அத்தனையும்.

படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயண்ட் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் பாடல்களில் பிரமிக்க வைத்து விட்டார். பின்னணியிலும் பிரமிக்க வைத்திருக்கிறார். பாட்டின் வரிகளுக்கு இடை இடையே வரும் இசையில் புதுப் புயலாக மாறி அசத்தியிருக்கிறார். ரஹ்மானின் பெஸ்ட் மியூசிக் இது. பி.சி.ஸ்ரீராம் கேமராவில் புகுந்து விளையாடியிருக்கிறார். காட்சிகளை அவர் பிடித்துள்ள விதம் அபாரம். சண்டைக் காட்சிகளில் புதுமை என்று சொல்ல முடியவில்லை. டிப்பிக்கல் ஷங்கர் டைப் சண்டைகளாக உள்ளன.

Leave a Reply