‘ஐ’ படத்தின் முழுக்கதையும் இண்டர்நெட்டில் லீக்? ஷங்கர் அதிர்ச்சி

shankarவரும் பொங்கல் தினத்தில் ஷங்கரின் ‘ஐ’ மற்றும் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீசாக இருந்தது. இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஜனவரி 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் விஜய் மற்றும் விஷால் ரசிகர்கள் அஜீத்தையும் அவருடைய ரசிகர்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை டுவிட்டரில் ஒரு திடுக்கிடும் செய்தி பரவி வருகிறது. ‘ஐ’ படத்தில் ஷங்கரின் உதவியாளராக பணிபுரிந்த ஒருவரது நெருக்கமான நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஐ’ படத்தின் கதை முழுவதையும் விலாவரியாக போட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தன்னுடைய நண்பன் போதையில் இருந்தபோது முழுக்கதையையும் உளறியதாகவும், அதை அப்படியே பதிவு செய்திருப்பதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன்படி விக்ரம் நடித்த கேரக்டர்கள் லிங்கேசன், லீ என்றும், எமி ஜாக்சன் ப்ரியா என்ற கேரக்டரில் நடித்திருப்பது தொடங்கி கிட்டத்தட்ட முழு கதையும் அவர் கூறியுள்ளார். டுவிட்டரில் இருக்கும் இந்த லிங்க்கை நோக்கி தற்போது சினிமா ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

படம் ரிலீஸ் ஆவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே முழுக்கதையும் ரிலீஸ் ஆனதால் ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Reply