அஜித்துக்கு நான் தான் சான்ஸ் வாங்கி கொடுத்தேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
அஜித் நடித்த முதல் படமான ‘அமராவதி’ சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் தெலுங்கில் அறிமுகமான ‘பிரேம புஷ்டகம்’ என்ற படத்தின் வாய்ப்பை தான் வாங்கி கொடுத்ததாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தயாரித்த ‘பிரேம புஷ்டகம்’ என்ற படத்திற்கு அவரது மகனும் இயக்குனருமான மார்த்திராவ் புதுமுகம் ஒருவரை தேடி வந்த நிலையில் நான் தான் அவருக்கு அஜித்தை பரிந்துரை செய்தேன்.
சாக்லேட் பாய் மாதிரியும் இல்லாமல் வித்தியாசமாகவும் அழகாகவும் அஜித் இருந்ததால் அந்த படத்திற்கு உடனே அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த படம் நான்கு வருடங்கள் கழித்து தமிழில் ‘காதல் புத்தகம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.