அஜித் வீட்டில் விஜய்யை பார்த்தேன்: நடிகர் சிவா
நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் சூப்பர் வசூல் பெற்று நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள சிவா, முதல்முறையாக விஜய்யை அஜித் வீட்டில் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
‘‘நான் விஜய் சாரை முதன் முதலாக அஜித் சார் வீட்டில்தான் பார்த்தேன், அந்த அளவுக்கு அவர்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.
தமிழ்ப்படம் 2′ படத்தில் அஜித், விஜய் இருவருடைய படங்களையும் அவர் கலாய்த்துள்ள நிலையில் அஜித், விஜய் குறித்து அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.