துப்பாக்கி வெற்றி படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்தில் விஜய் மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லனாக பாலிவுட்டின் பிரபல நடிகர் நீல் நிதின் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பாலிவுட் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நீல்நிதின், “இந்த படத்தில் நான் வில்லனாக நடித்தபோதும் எனக்கு விஜய்க்குக்கும் சண்டைக்காட்சிகள் இல்லை. கத்தி படத்தில் நாங்கள் இருவரும் கத்தியுடன் மோதாமல் புத்தியுடன் மோதுகிறோம்.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விஜய்யை நேரில் முதன்முதலாக பார்த்தபோது, அவரது எளிமையை கண்டு வியந்தேன். சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற விஜய், ஒரு சாதாரண துணைநடிகர் போல மிக எளிமையாக இருந்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவரது எளிமையையும், அமைதியையும் பார்த்து யாரும் அவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றவர்கள் செய்யும் பந்தாக்களுக்கு அளவே இல்லை. இந்நிலையில் மிக எளிமையாக இருக்கும் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சிறிதும் பொருந்தாது. அதைவிட வேறு ஏதாவது பெரிய பட்டம் இருந்தால் அந்த பட்டத்தை விஜய்க்கு தாராளமாக கொடுக்கலாம், என்று கூறியுள்ளார். வில்லன் நடிகரின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.