ரஜினியுடன் மோதுகிறாரா ஷங்கர்?

i-to-clash-with-lingaaபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்டை டிசம்பர் 2வது வாரத்தில் ரிலீஸ் செய்ய ஆஸ்கார் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் ‘லிங்கா’வும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நேரத்தில் மோதினால், ஓப்பனிங் கலெக்ஷன் பாதிக்கப்படும் என இரண்டு தயாரிப்பாளர்களும் கருதுவதாகவும், அதனால் ரிலீஸ் தேதியை மாற்ற இரண்டு தயாரிப்பாளர்களும் மிக விரைவில் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் நடித்துள்ள லிங்கா திரைப்படமும், ஷங்கரின் ஐ திரைப்படமும் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இரண்டு படங்களும் வெவ்வேறு தினங்களில் வெளியாக வேண்டும் என ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply