வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட இந்திய வீரரை பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்தது.

sathya sheil yadavஸ்ரீநகர் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட   இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் இன்று இந்தியாவிடம் ஒப்படைத்தது.

ஜம்மு- காஷ்மீரில் உள்ள செனாப் என்னும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அடித்து செல்லப்பட்ட இந்திய வீரர் சத்யஷீல் யாதவ் அவர்களை பாகிஸ்தான் ராணுவம் காப்பாற்றியது.  அதன்பின்னர் இந்திய தூதரகமும், பாகிஸ்தான் தூதரகமும் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக நேற்று அவர்  விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலையால் அவரது குடும்பம் மகிழ்ச்சி அடைந்ததுள்ளது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இந்திய வீரர் சத்யஷீல் யாதவ் அவர்களை பாகிஸ்தான் நல்ல முறையில் மரியாதையாக கவனித்ததாகவும், அவரிடம் சிறிய அளவில் சாதாரண விசாரணையை மட்டும் செய்துவிட்டு பின்னர் இந்தியாவிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது விடுதலைக்காக முயற்சி எடுத்த
பாகிஸ்தான் விவகாரங்களை கவனிக்கும் இந்திய இணை செயலாளர் ருத்ரேந்திர தாண்டன் மற்றும் வெளியுறவு செயலாளர்களுக்கு அவரது குடும்பம் தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை ஆர்.எஸ்.புராவில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் இந்திய வீரர் சத்யஷீல் யாதவ் ஒப்படைக்கப்பட்டார். அவரை அவரது வீட்டிற்கு இந்திய ராணுவம் ஜாக்கிரதையாக அழைத்து சென்று குடும்பத்தினர்களிடம் ஒப்படைத்தது.

Leave a Reply