ஐ’ படத்திற்கு எதிராக மனு கொடுத்த பிக்சர் மீடியா ஹவுஸ் இன்று நீதிமன்றத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றதால் ‘ஐ’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்தது என்றும், அதனால் படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு ரிலீஸாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரமாண்டமாக ‘ஐ’ படத்தை இயக்கி வந்த ஷங்கர், வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தங்களிடம் வாங்கிய கடனை திருப்பி தராததால், படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்குமாறு பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் ‘ஐ’ படத்திற்கு மூன்று வார கால இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன், பிக்சர் மீடியா ஹவுஸ் நிறுவன அதிபரிடம் பேசிய சமாதான பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதால் இருவரும் சமாதானமாகிவிட்டதாக கூறப்பட்டது. இன்று மீடியா ஹவுஸ் நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றதால் படத்தின் ரிலிஸுக்கு ஏற்பட்டிருந்த தடங்கல் நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது.