பசுவை கொன்றால் கை கால்களை உடைப்பேன். பாஜக எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு

பசுவை கொன்றால் கை கால்களை உடைப்பேன். பாஜக எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு

சமீபத்தில் நடைபெற்ற உத்தரபிரதேச மாநில தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, அம்மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றது. யோகி முதல்வராக பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி மாநிலத்தில் விக்ரம் சாய்னி என்பவம் காட்டாயுலி என்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் சமீபத்தில் நடந்த பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘பசுவை தாயாக நினைக்காதவர்கள் மற்றும் பசுவை கொல்பவர்களின் கைகள் மற்றும் கால்களை நானே உடைப்பேன்’ என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார்.

ஏற்கனவே அனுமதி பெறாத இறைச்சிக்கடைகளை உபி அரசு மூடியுள்ளதால் அதிருப்தியில் இருக்கும் உபி மக்கள் விக்ரம் சாய்னியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் சாய்னி கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த முசாப்பர்நகர் கலவரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply