ரஜினி ரசிகர்கள் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்வேன். சிங்காரவேலன்

singaravelanலிங்கா விவகாரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி தமிழகத்தையே பரபரப்பு ஏற்படுத்திய விநியோகிஸ்தர் சிங்காரவேனல், தன்னை ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்றும் இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

லிங்கா விவகாரத்தின் தற்போதைய நிலை குறித்து சிங்காரவேலன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து சில கருத்துக்களை கூறினார். அவற்றில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

“நாங்கள் உண்ணாவிரதம் இருந்த அன்று மாலை ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்து எங்கள் மீது குற்றம் சாட்டினார். அன்றைய தினமே விநியோகஸ்தர்களுக்கான பணம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த நாள் எங்களைத் தொடர்பு கொண்டு “ரஜினி சார்.. உங்கள் மீது கடும் வருத்தத்தில் இருக்கிறார். ஆகையால் வருத்தம் தெரிவித்தால் பேசலாம்” என்றார்கள். உடனே நாங்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்தோம். எங்களது பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டு இருக்கிறது என்று நம்பினோம்.

ஆனால், ராக்லைன் வெங்கடேஷ் அளித்துள்ள பேட்டியில் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியிருக்கிறார். எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நாங்கள் வேந்தர் மூவிஸை தொடர்பு கொண்டு கேட்ட போது எங்களையும் கூப்பிடவில்லை என்று கூறினார்கள்.

தற்போது எங்களுடைய நிலைமை கிணற்றில் போட்ட கல் போல ஆகிவிட்டது. பொங்கலுக்கு ‘ஐ’ வெளியானதால் அனைத்து திரையரங்கிலும் இருந்து ‘லிங்கா’ படத்தை எடுத்துவிட்டார்கள். திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால், எங்களுக்கு மிகவும் நெருக்கடி தருகிறார்கள். ஆகையால், நாங்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க தீர்மானித்திருக்கிறோம்.

கடந்த முறை குறைந்த அளவில் தான் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். இம்முறை அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.

‘லிங்கா’ எவ்வளவு வசூலானது என்பதை தயார் செய்துகொண்டிருக்கிறோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவை நாடியிருக்கிறோம். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை தற்போது நீக்கிவிட்டேன். அதற்கு காரணம் ரஜினி ரசிகர்கள். அவ்வப்போது, ரசிகர்கள் என்னை அச்சுறுத்தி வருகிறார்கள். யாரெல்லாம் எனக்கு போன் செய்தார்கள், என்ன பேசினார்கள் என்ற அனைத்து ஆடியோவையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்து உங்களது நம்பர் கொடுத்து, உங்களைத் திட்டச் சொன்னார்கள் என்று கூறுகிறார்கள். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பேர் திட்டிவிட்டார்கள். நீயும் திட்டிக்கோ என்று சொல்லிவிடுவேன்.

ஃபேஸ்புக் பக்கத்தை வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீக்கி இருக்கிறேன். என்னை அச்சுறுத்தியவர்கள் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க இருக்கிறேன்” என்றார் சிங்காரவேலன்.

Leave a Reply