விரைவில் அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன். தீபா

விரைவில் அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன். தீபா

அதிமுக பொதுச்செயலாளராக நேற்று சசிகலா பதவியேற்று கொண்டார். தனது முதல் உரையில் ராணுவ கட்டுப்பாட்டுடன் கழகத்தை காப்போம் என்றும் அவர் சூளுரைத்தார். இதன் மூலம் ஜெயலலிதா போலவே இனி அதிமுக சசிகலாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றே அதிமுகவினர் கருதுகின்றனர்.

இந்நிலையில் விரைவில் அதிமுகவை மீட்டு அதன் தலைவர் ஆவேன்’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தொண்டர்கள் நேராக தீபாவின் வீட்டிற்கு சென்று அதிமுகவை சசிகலாவிடம் இருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவர்களிடம் பேசிய தீபா, ‘சிறிது காலம் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”கூடிய விரைவில் அதிமுகவுக்கு தலைமையேற்பேன். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பார் என்பது ஏற்கனவே அறிந்ததுதான். சசிகலா குறித்து வேறு ஏதும் பேச விரும்பவில்லை.”என கூறினார்.

இந்நிலையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நேற்று சசிகலா பதவியேற்று கொண்டது குறித்து கருத்து கூறிய பிரபல பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரியில் வரவுள்ளதாகவும், அதில் அவர் தண்டனை பெற்றால் அவரது அரசியல் வாழ்க்கை அத்துடன் முடிந்துவிடும் என்றும் கூறினார்.

Leave a Reply