உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி. விரைவில் கருணாநிதியை சந்திப்பேன். ஜி.கே.வாசன்
கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட ஜி.கே.வாசனின் தமிழ் மாநில கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜி.கே.வாசன் தேர்தலுக்கு பின் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அவர் திமுகவுடன் இணைந்து போட்டியிட போவதாக கடந்த சில நாட்களாக செய்தி வந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுகவுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசர், வாசன் காங்கிரஸ் கட்சியுடன் இணையவேண்டும் என தான் விரும்புவதாகவும், இருப்பினும் இறுதி முடிவு எடுக்க வேண்டியது அவர்தான் என்றும் தெரிவித்துள்ளார்.