மேற்குவங்கதில் இந்திய விமானப்படையின் விமானம் விழுந்து நொறுங்கியது

மேற்குவங்கதில் இந்திய விமானப்படையின் விமானம் விழுந்து நொறுங்கியது

flightஇந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் சமீபத்தில் சென்னையில் இருந்து கிளம்பி அந்தமான் சென்றபோது திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் முயற்சியில் ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விமானம் மாயமாகி பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காததால், விமானத்தை தேடுவதற்காக ரஷ்யாவில் இருந்து இரண்டு கப்பல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படையின் விமான தளத்தில் இருந்து நேற்று கிளம்பிய நவீன ஜெட் பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான தள எல்லைக்குள் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் பத்திரமாக வெளியே குதித்து உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு ஜெட் விமானம் கலைகுண்டா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. விமானப் படை போர் விமானிகளுக்கு 3-ம் நிலை பயிற்சியாக ஓராண்டுக்கு இந்த ஜெட் விமானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Leave a Reply