17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்
சமீபத்தில் நடந்த தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஒருசில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டன. இவர்களில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றவுடன் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மீண்டும் டி.கே. ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
1. சத்திய பிரதா சாகு – போக்குவரத்து ஆணையர்.
2. டாக்டர் டி. கார்த்திகேயன் – தொல்லியல் துறை இயக்குனர்.
3.- சமயமூர்த்தி – வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
4. கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
5. டாக்டர் கருணாகரன் – நெல்லை மாவட்ட கலெக்டர்.
6. டாக்டர் நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
7. டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
8. வெங்கடாசலம் – தேனி மாவட்ட கலெக்டர்.
9. வி.சம்பத் – சேலம் மாவட்ட கலெக்டர்.
10. மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
11. ஞானசேகரன் – திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
12. பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர்.
13.எஸ். நாகராஜன் – அரசு இ. சேவை மைய இயக்குனர்.
14.ராஜேந்திர ரத்தனு0 பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
15. டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
16.டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
17 . குமரகுரபரன் – தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு
இதேபோல் மாற்றப்பட்ட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
1. சென்னை பெருநகர காவல் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
3. தமிழக சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சிபிசிஐடி ஏடிஜிபியாக கரண் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
7. தருமபுரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் கவனிப்பார்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.