விரைவில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தி பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை உள்பட பல நகரங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்தை தொடர்ந்து தற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றமும் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று திடீரென பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்:
தற்போதைய பதவி மாற்றப்பட்ட பதவி.
கணக்கு மற்றும் கருவூலங்கள் துறை ஆணையர் வீரசண்முகமணி – தொழிலாளர் நல ஆணையர்
தொழிலாளர் நல ஆணையர் சந்திரமோகன் – சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர்
வேளாண்மைத் துறை கூடுதல் செயலர், வாசுகி – நில அளவைத் துறை இயக்குநர்
தொழில் துறை இணைச் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் – தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குநர்
கோபிச்செட்டிப்பாளையம் உதவி ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி – மாற்றப்பட்டு, அரியலூர் உதவி ஆட்சியர்
ஐபிஎஸ் அதிகாரிகள்
சென்னை பெருநகர காவல்துறை, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், சென்னை நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஆபாஷ் குமார், சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி அமல்ராஜ், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய் குமார், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதவி எஸ்.பி., நிஷா சேகர், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உப கோட்டத்தின் உதவி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.