வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி கைது!
மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வருவாய் துறையின் பெண் அதிகாரி ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை திருமணம் செய்தார்
இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக தெரிகிறது
இது குறித்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது