பெங்களூரைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிக்குமார், தாவர்கரே அவரது வீட்டில் திடீரென நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு மணற்கொள்ளையர்கள் மிரட்டல் காரணம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறபடுகிறது. இதுகுறித்து கர்நாடக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவ ரவிகுமார், 36 வயதே நிரம்பியவர். தற்போது கர்நாடக மாநில வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தார்.
வார நாட்களில் தாவர்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், வார இறுதி நாட்களில் நாகர்பவியிலுள்ள உறவினர் வீட்டிலும் தங்கி தனது பணியை கவனித்து வந்தார்.
இந்நிலையில் அவரது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியான கோலார் மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக அவர் சமீபகாலமாக கடும் நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது குடும்பத்தினர் உள்பட அந்த பகுதியில் உள்ளவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை செய்யவேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிகுமாரின் மரணத்தை அடுத்து இன்று நடக்க இருந்த பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.