தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் திடீரென பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று காலை தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ”நகராட்சி நிர்வாக இணை ஆணையராக எம்.அசியா மரியம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்துறை கூடுதல் இயக்குநராக எஸ்.செந்தாமரையும், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக எஸ்.நடராஜனும், பொது (தேர்தல்) துறை, இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானமும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக டி.ஆனந்த்தும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) ஆர்.கண்ணனும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராக எல்.நிர்மல்ராஜூம், சென்னை மாநகராட்சி தென் மண்டல துணை ஆணையராக ஏ.அண்ணாதுரையும், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநராக ஆர்.ஆனந்தகுமாரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.