IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், உள்துறை, மதுவிலக்கு, கலால் வரித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவன தலைமை இயக்குநராக இறையன்பு மாற்றப்பட்டுள்ளார்.
பொருளாதாரம், புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். பங்கஜ்குமார் பன்சால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையராக கே. மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.எஸ். பழனியப்பன் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.