கோஹ்லி, தவான் அபார ஆட்டம். அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

கோஹ்லி, தவான் அபார ஆட்டம். அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையின் முக்கிய போட்டியான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதிய போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவிச்சை இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனால் 192 என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி மிக எளிதில் 38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி போட்டியை விட்டு வெளியேறுகிறது

இந்த நிலையில் இந்திய அணி வங்கதேச அணியை வரும் 15ஆம் தேதி சந்திக்கின்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply