மோசமான புனே ஆடுகளம். ஐசிசி நடுவர் அறிக்கையால் பரபரப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் புனேவில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் புனே ஆடுகளம் குறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்புமாறு ஐசிசி உத்தரவிட்டது. இதன்படி ஐசிசிபோட்டி நடுவர் கிறிஸ் பிராட், ஐ.சி.சி.யின் ஆடுகளம் மற்றும் பவுண்டரி கோடு அருகே பார்வையிடுதல் விதிகள் 3-ன்படி ஐ.சி.சி.க்கு ஒரு அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் புனே ஆடுகளம் மோசமானது என்றும் முதல் பந்தில் இருந்தே பந்து டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்
இந்த அறிக்கையின் அடிப்படையில் விளக்கம் அளிக்குமாறு பிசிசிஐக்கு ஐசிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பிசிசிஐ அளிக்கும் விளக்கத்திற்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐசிசி கூறியுள்ளது. ஆடுகளம் மோசம் என்பது உறுதியானால் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.