தொடரை இழந்தாலும் தரவரிசையை இழக்க்காத இந்திய அணி.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை தென்னாப்பிரிக்க வென்றுள்ள நிலையில், தற்போது சர்வதேச ஒருநாள் போட்டி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விபரம் வருமாறு:
1. ஆஸ்திரேலிய அணி (127 புள்ளிகள்)
2. இந்திய அணி (114 புள்ளிகள்)
3. தென் ஆப்பிரிக்க அணி (112 புள்ளிகள்)
4. நியூசிலாந்து அணி (109 புள்ளிகள்)
5. இலங்கை அணி (103 புள்ளிகள்)
6. இங்கிலாந்து (100 புள்ளிகள்)
7. வங்கதேச அணி (96 புள்ளிகள்)
8. மேற்கிந்திய தீவுகள் அணி (88 புள்ளிகள்)
9. பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்)
10. ஜிம்பாவே அணி (46 புள்ளிகள்)
பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டிவில்லியர்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் விராட்கோலி 2-வது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் வில்லியம்சன் உள்ளார். கேப்டன் டோனி 2 இடம் முன்னேறி 6-வது இடமும், ஷிகர் தவான் 7-வது இடமும், ரோகித் சர்மா 12-வது இடமும், ரஹானே 11 இடங்கள் முன்னேறி 27-வது இடமும் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 3 இடங்கள் பின்தங்கி 5-வது இடம் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் பிளிஸ்சிஸ் 7 இடங்கள் முன்னேறியும், டி காக் 13 இடம் முன்னேறியும் இணைந்து 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.
பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். இந்திய வீரர்களில் அஸ்வின் ஒரு இடம் பின்தங்கி 10-வது இடம் பெற்றுள்ளார். அக்ஷர் பட்டேல் 19 இடங்கள் முன்னேறி 28-வது இடமும், அமித் மிஸ்ரா 13 இடங்கள் ஏற்றம் கண்டு 32-வது இடமும், மொகித்ஷர்மா 4 இடம் முன்னேறி 44-வது இடமும் பிடித்துள்ளனர். ஆல்-ரவுண்டர் தர வரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் முதலிடத்தில் தொடருகிறார்