அண்டார்டிகா பாறையில் இருந்து குடிநீர். ஐக்கிய அமீரக நாட்டின் பிரமாண்ட திட்டம்
ஐக்கிய அமீரக நாடு எண்ணெய் வளத்தில் செழித்து காணப்பட்டாலும் அங்கு வாழும் மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. மழை இல்லாமல் வறண்டு இருக்கும் அந்நாட்டின் குடிநீர் தேவைக்கு கடல் நீர் குடிநீராக்கப்பட்டு சமாளித்து வருகிறது.
இந்த நிலையில் அண்டார்டிகாவில் இருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து கடல்மார்க்கமாக கொண்டு வந்து பின்னர் அதை தண்ணீராக்கி பயன்படுத்த ஐக்கிய அமீரகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 500 மில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டுள்ள அந்நாட்டு இந்த புரொஜக்டை வரும் 2019ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.