செல்போன் மூலம் பணப்பரிமாற்றம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் புதிய அறிமுகம்.

icici_2100903fசெல்போன் நம்பரை பயன்படுத்தி பணம் அனுப்பும் புதிய வசதியை ஐசிஐசிஐ வங்கி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த புதிய திட்டத்தின்படி வங்கியின் ஏ,டி.எம் கார்டு இல்லாமலே பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும் என  ஐ.சி.ஐ.சிஐ வங்கியின் செயல் இயக்குநர் ராஜீவ் சபர்வால் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் பணம் பெறுபவரிடம் வங்கிக் கணக்கு இல்லையென்றாலும்,  அவருடைய செல்போன் எண் மற்றும் முகவரியை பதிவு செய்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பலாம். இதற்காக (‘Cardless Cash Withdrawal’) என்ற புதிய திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டதின் மூலம் பணம் அனுப்ப வாடிக்கையாளர்களுக்கு நான்கு இலக்க ரகசிய எண் வழங்கப்படும். அதுபோல், பணம் பெறுபவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் 6 இலக்க ரகசிய எண் வழங்கப்படும். பணம் அனுப்பியபின், அதை பெறுபவர், வங்கியின் எந்த ஏடிஎம்மிலும் போய் பணம் எடுத்துக்கொள்ளலாம். அப்போது, தன் மொபைல் எண், ஆறு இலக்க ரகசிய எண் மற்றும் அனுப்பிய தொகையை பதிவு செய்தால் உடனே பணம் கிடைக்கும் என அவர் கூறினார்.

Leave a Reply