ஆன்லைனில் பணம் டிரான்ஸ்பர் செய்ய இனி பாஸ்வேர்டு தேவையில்லை. குரல் ஒன்றே போதும்.

voice passwordவாடிக்கையாளர்களின் குரலையே ‘பாஸ்வோர்ட்’ ஆக பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 3.3 கோடி பேர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக ஒரு வங்கியில் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்ய வேண்டுமானால், வாடிக்கையாளரின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவை அத்தியாவசிய தேவையாக இருந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளரது குரலை மட்டுமே வைத்து பணத்தை மிக எளிதாக டிரான்ஸ்பர்  செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அலுவலருமான சந்தா கோச்சார் தெரிவித்துள்ளார்.

இதற்காக, வாடிக்கையாளர்களின் குரல் பதிவுகள் கொண்ட ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட கைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் குரலை அடையாளம் கண்டு, பணப் பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கும் நவீன தொழில்நுட்பம் கையாளப்படுகின்றது.

ஒவ்வொரு வாடிக்கையாளரின் குரலின் ஏற்றத்தாழ்வு, அவரது உச்சரிப்பு, பேசும் வேகம்- பாணி ஆகியவற்றை வைத்து முந்தைய ஒலிப்பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன இயந்திரங்கள், இந்த குரலையே பாஸ்வோர்டாக பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்ளும்.

Leave a Reply