ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஐசிஐசிஐ திட்டம்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஐசிஐசிஐ திட்டம்

iciciநாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. பைனான்சியல் டெக்னாலஜி பிரிவில் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது.

இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு வரும் பட்சத்தில் அதனை நாங்கள் பரிசீலனை செய்வோம், ஆனால் இதற்காக பிரத்யேக நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று ஐசிஐசிஐ வங்கி செயல் இயக்குநர் ராஜீவ் சபர்வால் தெரிவித்தார். பிக்டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் ஆகிய பிரிவுகளில் ஐசிஐசிஐ வங்கி ஆர்வமாக இருக்கிறது.

கடந்த ஜனவரியில் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு பல நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்குரிய திட்டத்தை அறிவித்து வருகின்றன.

எஸ்பிஐ வங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக பெங்களூருவில் ஒரு கிளை தொடங்கி இருக்கிறது. இதேபோல ஆர்பிஎல் வங்கியும் ஒரு கிளை திறந்திருக்கிறது. மற்றொரு முக்கிய வங்கியான பெடரல் வங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது.

Leave a Reply