ஒரு படம் ரிலீஸ் ஆன தினத்தன்றே திருட்டு டிவிடிக்கள் வெளிவருவது தற்போது வழக்கமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. மேலும் ரிலீஸாகி முதல்காட்சி முடியும் முன்பே இணையதளங்களிலும் திரைப்படங்கள் வெளிவந்து விடுகின்றது. இதை தடுப்பதற்கு தயாரிப்பாளர்களும், சைபர் க்ரைம் போலீஸாரும் தீவிர நடவடிக்கைகள் எடுத்தும், இதை முழுமையாக சரிசெய்ய முடியவில்லை.
இந்நிலையில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சில இணையத்தில் லீக் ஆன அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த தகவல் தெரிந்தவுடன் இயக்குனர் பாண்டிராஜ் மட்டுமின்றி சிம்பு, நயன் தாரா உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிம்பு- நயன் தாராவின் காதல் காட்சிகள் மற்றும் ஒரு முழுமையான பாடல்காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதற்கு கண்டிப்பாக படக்குழுவினர்களில் ஒருவர் உடந்தையாக இருந்திருக்க வேண்டும். அந்த கருப்பு ஆடு யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.