கேரளாவில் உள்ள இடுக்கி அணை மீண்டும் திறப்பு

கேரளாவில் உள்ள இடுக்கி அணை மீண்டும் திறப்பு

கேரளாவில் கடந்த மாதம் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கேரளா, தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அதிக கனமழை காரணமாக இடுக்கி அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்து வருவதாலும் இடுக்கி அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply