மணிப்பூர் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு. 3 பேர் பலி. பெரும் பதட்டம்

manipurமணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் நகரில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்த பயங்கர சம்பவத்தில் 3 தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர்.  இம்பால் நகரின் ஹூயாதாங் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த பயங்கரவாத சம்பவத்தில் மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக இம்பால் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்தகுண்டுகளே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் என இம்பால் நகரின் முக்கிய பகுதிகளிலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply