ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: மீண்டும் வாக்கெடுப்பு முடிவை எடுப்பாரா ஆளுனர்?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவாகின. ஆனால் இந்த வாக்கெடுப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு அராஜகமாக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரகசிய வாக்கெடுப்பு நடந்தால்தான் எம்.எல்.ஏக்களின் உண்மையான எண்ணம் வெளிப்படும் என்றும் அதுதான் ஜனநாயகம் என்றும் திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அணி வலியுறுத்தியும் சபாநாயகர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை
இந்நிலையில் கடும் அமளி ஏற்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்
இந்த சந்திப்பின்போது சட்டசபையில் அமளியில் ஈடுபட்டது தவறுதான் என்றும் ஆனால் வெளிப்படையான வாக்கெடுப்பினால் இந்த அமளி ஏற்பட்டதாகவும், மீண்டும் மறைமுகமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஆளுநரை நேரில் சந்தித்து அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை ஆளுனர் ஏற்று மீண்டும் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்