என்னை கைது செய்தால் அதுவே தெலுங்கானா முதல்வரின் கடைசி தினம். சந்திரபாபு நாயுடு

andraதெலங்கானா மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க தெலுங்கு தேச கட்சி முயன்றதாக செய்திகள் வெளியானதும், இது தொடர்பான உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த சம்பவத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையில் மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், ‘சந்திரசேகர ராவ் என்னைக் கைது செய்தால், அதுவே அவரது அரசின் கடைசி தினமாக இருக்கும்’ என்று சந்திரபாபு நாயுடு மிரட்டியுள்ளதால் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ” என்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதோ அல்லது என்னைப் போன்ற குரல் உடையவர்களை வைத்து அந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டதோ. எதுவாக இருந்தால் எனக்கென்ன? அதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?

நாம் இப்போது இரண்டு மாநிலங்கள். இரண்டுமே தெலுங்கர்களின் நலனுக்காகத் தான் இயங்குகின்றன. நம் இரண்டு மாநிலங்களின் வளர்ச்சிக்காக நாம் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளேன்.

ஆனால் இத்தனைக்கு பிறகும், என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.

தெலங்கானாவில் இருந்து நான் எம்எல்ஏக்களை எடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் உண்மையில் அவர்தான் என்னுடைய கட்சி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை அமைச்சராகவும் ஆக்குகிறார். அதன் மூலம் என் கட்சியை உடைக்கப் பார்க்கிறார். இதனை தட்டிக் கேட்காமல் ஆளுநரும் அமைதியாக இருக்கிறார்.    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Leave a Reply