நிர்பயா குற்றவாளிக்கு தூக்கு எப்போது? போராட்டம் நடத்த பெற்றோர் முடிவு

நிர்பயா குற்றவாளிக்கு தூக்கு எப்போது? போராட்டம் நடத்த பெற்றோர் முடிவு
nirbhay
டெல்லியில் கடந்த சில வருடங்களுக்கு முன் பேருந்து ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி சமீபத்தில் விடுதலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் நிர்பயாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை தூக்கிலிடாவிட்டால், அடுத்த மாதம் 29-ம் தேதி பொதுமக்களை திரட்டி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிர்பயாவின் பெற்றோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த நிர்பயாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளில் டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று நிர்பயாவின் பெற்றோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ”பாலியல் கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களை அதிக அளவு ஏற்படுத்த வேண்டும். நிர்பயாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை தூக்கிலிடாவிட்டால், அடுத்த மாதம் 29-ம் தேதி மக்களை திரட்டி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று ஆவேசத்துடன் கூறினர். எனவே குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply