ஸ்மார்ட் போன் மோகத்தில் இருந்து விடுபட

smartphone_2324723f

ஸ்மார்ட் போனின் தாக்கம், அதன் மீதான மோகம் ஆகியவை பற்றிப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுக் கவலை தரும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கேத்தரின் ஸ்டீனர் ஸ்மார்ட் உள்ளிட்ட உளவியல் வல்லுநர்கள் போன் மோகத்தின் பாதிப்பைக் குறைப்பதற்கான வழிகளைத் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள், ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் பகுதியை உருவாக்குங்கள், போனைப் பயன்படுத்தும் நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிடுங்கள், அருகிலேயே நோட்டு ஒன்றை வைத்திருந்து செய்ய வேண்டியவற்றைக் குறித்து வையுங்கள் என இந்த ஆலோசனைகள் நீள்கின்றன.

ஸ்மார்ட் போன் நேரத்தைக் கட்டுப்படுத்தும் செயலிகளைப் பயன்படுத்துங்கள் என்று சொல்வதோடு சிறிது நேரம் போன் இல்லாமல் இருக்கவும் பழகுங்கள் என்றும் சொல்கின்றனர்.

Leave a Reply