காணாமல் போன விமானிகள் குடும்பத்தினர்களுடன் ஐ.ஜி. சர்மா சந்திப்பு!

missing flightகடந்த 8ஆம் தேதி ஆபரேஷன் ஆம்லா ஒத்திகையின்போது மூன்று பேர்களுடன் திடீரென மாயமான விமானத்தை தேடும் பணி கடந்த 17 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இருப்பினும் விமானம் விழுந்த இடம் குறித்த தகவல் எதுவும் உறுதியாக தெரியவில்லை. நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளின் மூலம் தேடியும் பலன் தராததால் மாயமான விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காணாமல் போன விமானத்தில் இருந்த விமானிகளின் குடும்பத்தினருடன், நேற்று கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. சர்மா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

விமானத்தை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் வெளிநாட்டில் இருந்து நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் தேடவுள்ளதாகவும், மேலும் தேடுதல் வேட்டையின் அடுத்த கட்டத் திட்டம் குறித்தும் அவர் காணாமல் போன விமானிகளின் குடும்பத்தினர்களிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் ஐ.ஜி. சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”டோர்னியர் விமானம் கடலுக்கு அடியில் 3,500 மீ ஆழத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள களிமண்ணை தோண்டி எடுத்து விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விமானம் விழுந்த பகுதி மிகவும் ஆழமானது என்பதால், அதை தேடும் பணி சவலாக உள்ளது” என்று கூறினார்

Leave a Reply