சென்னை ஐ.ஐ.டியில் படித்து வரும் ஒரு பிரிவு மாணவர்கள் அம்பேத்கார்-பெரியார் ஸ்டடி சென்டர் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்பினை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பினர் மத்திய அரசின் கொள்கைகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்ததால், இந்த அமைப்பு தடை செய்யப்படுவதாக சென்னை ஐஐடி தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் ஐஐடி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பேத்கார்-பெரியார் ஸ்டடி சென்டர் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்பினை நடத்தி வரும் அமைப்பு மீது அண்மையில் பெயர் குறிப்பிடாத சிலர் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூ அவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிடம் இருந்து கடந்த 15-ம் தேதியன்று சென்னை ஐ.ஐ.டி தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டது
இதன் அடிப்படையில் சென்னை ஐஐடி தலைவர், ஏபிஎஸ்சி அமைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.