ஜெயலலிதாவுக்காக இசைஞானி இரங்கல் பாடல் பாடினாரா?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா, மறைந்த முதல்வருக்காக இரங்கல் பாடல் ஒன்றை எழுதி, இசையமைத்து பாடியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இசைஞானியின் தரப்பினர் இதுகுறித்து கூறியபோது இந்த பாடலுக்கும் இசைஞானிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டனர்.
எனினும் இந்த பாடல் அம்மா, அம்மா என்று முடியும் வகையில் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. இதோ அந்த பாடலின் வரிகளை நீங்களும் படித்து பாருங்கள்
வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,
தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,”
யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., – வானே இடிந்.,