1500வது படத்தை நெருங்குகிறார் இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் படத்துக்கு இசை அமைத்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் 1500 வது படத்தை நெருங்கி வருகிறார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது

ஆதிராஜன் என்ற இயக்குனர் இயக்கும் நினைவெல்லாம் நீயடா என்ற திரைப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். இந்த படம் அவரது 1417 வது படம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது

இன்னும் 83 படங்களுக்கு அவர் இசை அமைத்தால் 1500 வது படத்தை எட்டி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இசைஞானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது