கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திற்கு பின்னர் போலீஸ், கோர்ட், ஜெயில் என அலைந்து திரிந்து தற்போது ஜாமீனில் உள்ள பவர்ஸ்டாருக்கு சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுள்ளது.
கையில் இருந்த பணம் பெருமளவில் கரைந்துவிட்டதால் மீண்டும் கண்டிப்பாக நடித்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.
தற்போது கிடாய் பூசாரி மகுடி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் பவர்ஸ்டார், சலூன் கடை வைத்திருக்கும் கேரக்டரில் நடித்துள்ளார். ஜானி படத்தில் ரஜினி நடித்திருக்கும் அதே கெட்டப்பில் வர இருக்கின்றாராம்.
முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பவர்ஸ்டார் தயங்கினாலும், பின்னர் பணம் கிடைக்கின்றது என்பதற்காக ஒப்புக்கொண்டாராம். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டதோடு ஒரு பாடலையும் பவர்ஸ்டார் பாடுவதற்கு அனுமதித்து உள்ளாராம். இதனால் பவர்ஸ்டார் பூரிப்பில் இருக்கின்றார்.