எனக்கு ரஜினி ஒரு டீ வாங்கி தர வேண்டிய கடன் உள்ளது. இளையராஜா

எனக்கு ரஜினி ஒரு டீ வாங்கி தர வேண்டிய கடன் உள்ளது. இளையராஜா

கமல்,ரஜினி, இருவரும் நீண்ட வருடங்களாக நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் இருவரும் இசைஞானிக்கு மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக கமல் மற்றும் ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. கமல்ஹாசனின் ‘சபாஷ்நாயுடு’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதிலும் இந்த படம் மீண்டும் எப்போது தொடங்கும் என்றுதெரியவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் தனது 74வது பிறந்த நாளை கொண்டாடிய இசைஞானி இளையராஜா, கமல், ரஜினி குறித்து சுவாரஸ்யமான சில விஷயங்களை கூறினார். அவர் கூறியதாவது:

எனக்கு பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டு கமல்ஹாசன் அவர்கள் தானாகவே முன்வந்து ‘நானும் இந்த விழாவுக்கு வருவேன், ராஜாவுக்கு வாழ்த்து கூறுவேன் என்று வம்படியாக வந்து தனக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு போனார்.

அதேபோல் ரஜினிகாந்த் அவர்கள் அன்றைய தினம் காலையிலேயே தனக்கு மும்பையில் இருந்து போன் செய்து தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதாகவும், 74 வயது என்பது மிகப்பெரிய விஷயம் அதனால் தான் போன் செய்து வாழ்த்து கூறுவதாகவும் தெரிவித்தார். அப்போது அவர் எனக்கு ஒரு டீ வாங்கி கொடுக்க வேண்டிய பாக்கி இருப்பதையும் அதை எப்போது வாங்கி தருவீர்கள் என்று கேட்டதும் ஒரு பத்து நிமிடம் விழுந்து விழுந்து போனிலேயே சிரித்ததாகவும், கண்டிப்பாக சென்னை திரும்பியவுடன் டீ வாங்கித்தருவதாக கூறியதாகவும் நகைச்சுவையுடன் இசைஞானி தெரிவித்தார்.

Leave a Reply