‘மாரி 2’ படப்பிடிப்பில் காயம்: டுவிட்டரில் விளக்கம் அளித்த தனுஷ்
தனுஷ் நடித்து வரும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நான் நலமுடன் இருப்பதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். இவர்தான் முதல் பாகத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் வித்யா பிரதீப் என்ற மற்றொரு நடிகையும் நடிக்கிறார்.
இந்நிலையில் ‘மாரி 2’ படத்தில் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன், டோவினோ தாமஸ் மோதும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக நடிகர் தனுஷூக்கு இடது கால் முட்டியிலும் இடது கையிலும் காயங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடா்ந்து அவா் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நடிகா் தனுஷ் இது தொடா்பாக தனது ட்விட்டா் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளதாவது
My beloved dear fans … It’s not a major injury and I’m well. Thank you so much for your concern prayers and love. Im forever grateful. Love you all. My pillars of strength.
— Dhanush (@dhanushkraja) June 23, 2018