விடுதலை செய்ய விருப்பமா? இல்லையா? ராஜீவ் கொலையாளிகள் குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

விடுதலை செய்ய விருப்பமா? இல்லையா? ராஜீவ் கொலையாளிகள் குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய விருப்பமா? இல்லையா? அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பது குறித்து இன்னும் மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர்களையும் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்தது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றது மத்திய அரசு

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள்  7 பேரை விடுதலை செய்ய விருப்பமா? இல்லையா? என்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ராஜீவ் கொலையாளிகள் விரைவில் விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply